சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா

Bookmark and Share

சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நல குறைவால் கடந்த மார்ச் 16-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று நள்ளிரவில் 1.15 மணி அளவில் மரணமடைந்துள்ளார். 

இதனையடுத்து அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பெசன்ட்நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. காலை 7 முதல் 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக நடராஜன் உடல் வைக்கப்பட உள்ளது.

காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளாருக்கு உடல் எடுத்துச்செல்லப்பட உள்ளது. நடராஜனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோலில் சென்னை வருகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions