சசிகலா, நடராஜன் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண் ஜெ... சொன்னது வலம்புரி ஜான்

Bookmark and Share

சசிகலா, நடராஜன் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண் ஜெ... சொன்னது வலம்புரி ஜான்

சசிகலா, நடராஜன் என்ற கடற் கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப்பெண் ஜெயலலிதா என்று மறைந்த வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் தனது நூலில் கூறியது இப்போது வைரல் ஆகியுள்ளது.

சென்னை: படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற் கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்...

இது மறைந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், முன்னாள் ராஜ்யசபா எம்.பி, வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு நக்கீரன் இதழில் எழுதிய "வணக்கம்" தொடரில் கூறிய வார்த்தைகள்.

வலம்புரி ஜானின் இந்த எழுத்து இப்போது வைரல் ஆக பரவி வருகிறது. ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் குறித்து அவர் அன்றே கூறிய இந்த வார்த்தைகள் எந்த அளவுக்கு உண்மையாகியுள்ளது என்று மக்கள் ஆச்சரியப்பட்டு இதை மீண்டும் படித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக விளங்கியவர் வலம்புரி ஜான். வார்த்தைச் சித்தர் என்று அழைக்கப்பட்ட வலம்புரி ஜான், 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்ற சமயத்தில் நக்கீரன் வார இதழில் வணக்கம் என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதினார். அதிலிருந்து சில..

சச்சந்தனும், ஜெயலலிதாவும்

சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்.

ஒவ்வொருவராக பழி வாங்கியவர் சசிகலா

ஜெ.,யின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெ.,யோடு சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர்.

பாதகம் செய்த சசிகலா - நடராஜன்

தங்களுக்கு சகாயம் செய்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருச்சி சவுந்தர்ராஜன் போன்றவர்கள் கூட, தாங்கள் இல்லாமல், ஜெ.,யை பார்க்க கூடாது என்ற நிலைக்கு மாற்றினர். எல்லா பாதகங்களையும் செய்து, தங்களை அதிகார இயந்திரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள சசிகலாவும், நடராஜனும் இதை செய்தனர்.

தமிழகத்தை கொள்ளையடிக்க

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., விசுவாசிகளை, சசிகலாவால் பழிவாங்கினார்; சசிகலாவோ, ஜெ., விசுவாசிகளையே பழிவாங்கினார். நடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை, ஜெ.,யின் பார்வையில் படாமல் துரத்தினர்.ஜெ.வைத் தூக்கி வளர்த்த மாதவன் நாயர் ஜெ.,யை துாக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, '36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளார்' என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான்.

சசிகலா - நடராஜன் கூட்டுத் திட்டம்

இதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த, பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டுத் திட்டமே காரணம்.

கடைசி வரை உணர மாட்டார் ஜெயலலிதா

தங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும், நடராஜனும் உருக்குலைத்து விட்டனர். இந்த சசிகலா, எம்.ஜி.ஆர்., ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல; சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும்; அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார் என்று அதில் சசிகலா நடராஜன் குறித்துக் கூறியிருந்தார் வலம்புரி ஜான். வணக்கம் என்ற பெயரில் நக்கீரன் இதழில் தொடராக எழுதி பின்னர் நூலாகவும் வந்த இது இப்போது வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions