வேட்டி, சட்டை போதும் சசிகுமார் முடிவு

Bookmark and Share

வேட்டி, சட்டை போதும் சசிகுமார் முடிவு

'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியவர் சசிகுமார். அந்தப் படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்தார்.

அதிர்ச்சியான அரசியலை 80களின் பின்னணியில் சுவாரசியமாகக் கொடுத்து ரசிகர்களையும் கவர்ந்து, திரையுலகத்தினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதன் பின் சிட்டியை பின்னணியாக வைத்து அவர் இயக்கிய 'ஈசன்' படம் தோல்விப் படமாக அமைந்துவிட்டது. இதற்கிடையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து வெளிவந்த 'நாடோடிகள்' படம் நல்ல வெற்றி பெறவே, 'ஈசன்' தோல்விக்குப் பிறகு படங்களில் நடிப்பதை மட்டும் செய்ய ஆரம்பித்தார்.

அதன் பின் 'பசங்க, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி' படங்களைத் தயாரித்தும் நடிக்கவும் செய்தார். இந்தப் படங்கள் அவருக்கு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.

தற்போது பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்தும் வருகிறார். இடையில் உதவி இயக்குனர் ஒருவரை படத்தின் இயக்குனரான பாலா அடித்ததால் படப்பிடிப்பு நின்று போயிருந்தத்து.

அதன் பின், 'தாரை தப்பட்டை' படத்தைப் பற்றிய புதிய தகவல் எதுவும் வரவில்லை. இந்தப் படத்திற்கடுத்து மீண்டும் கிராமத்துப் பின்னணியில் வேட்டி, சட்டை அணியும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில்தான் சசிகுமார் நடிக்கப் போகிறாராம்.

இந்தப் படத்தை 'ஜில்லா' படத்தை இயக்கிய ஆர்.டி.நேசனின் உதவியாளரான வசந்தமணி இயக்கப் போகிறார். ஜுன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
பேச்சு வார்த்தை இழுபறி, மெர்சல் மற்றும் பல புது படங்களின் நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions