சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா

Bookmark and Share

சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா

நடிகர் சசிகுமார் படங்களை இயக்கி நடித்து தயாரித்து வருகிறார். அவருக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிவிட்டார். அவரது நடிப்பில் சுப்பிரமணியபுரம் ஹிட்டானது. ஆனால் அவருக்கு அண்மைகாலமாக நடித்து வெளியாகும் படங்கள் பெரிதளவில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் அவர் தற்போது அசுரவதம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக FM சானல் ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். உடன் படத்தின் இயக்குனரும் பங்கேற்றார்.

அப்போது அவர் படத்திற்கு முதலில் சூரசம்ஹாரம் என பெயர் வைக்கலாம் என்று தான் முடிவு செய்திருந்தார்களாம். இதே தலைப்பில் முன்பே கமல்ஹாசன் நடித்த படம் வெளியானது.
இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தன் படத்திற்கு அதே பெயர் வைக்க ரூ 25 லட்சம் கேட்டார்களாம்.

இது படத்தின் பட்ஜெட்டில் பாதி என்பதால் முடியாது என கூறிவிட்டார்களாம். பின்பு தான் அசுரவதம் என பெயர் வைத்தார்களாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions