சசிக்குமாருக்கு கை எலும்புமுறிவு : தாரை தப்பட்டை சூட்டிங் நிறுத்தம்

Bookmark and Share

சசிக்குமாருக்கு கை எலும்புமுறிவு : தாரை தப்பட்டை சூட்டிங் நிறுத்தம்

தாரை தப்பட்டை படத்தின் சூட்டிங்கின் போது, நடிகர் சசிக்குமாருக்கு, கை எலும்புமுறிவு ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில், சசிக்குமார், வரலட்சுமி நடிப்பில் தாரை தப்பட்டை படம் உருவாகி வருகிறது.

இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சசிக்குமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அதிரடியான சண்டைக்காட்சியின் போது சசிகுமார் சற்றும் எதிர்பாராவண்ணம் விபத்துக்குள்ளானார்.

இதனால் அவரது இடது கை எலும்பு முறிந்தது.  உடனடியாக மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சைக்கு பின் சசிக்குமாரின் இடது கைக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. சிறிது காலம் ஒய்வெடுக்கும்படி மருத்துவர்கள் சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். சசிக்குமார் ஒய்வெடுக்க மதுரை சென்றுள்ளார். படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.

சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions