மீண்டும் தனுஷுடன் இணையும் சதீஷ்

Bookmark and Share

மீண்டும் தனுஷுடன் இணையும் சதீஷ்

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சதீஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மெரீனா’ படத்தின் மூலம் காமெடி நடிகராக வலம் வரத்தொடங்கினார். பின்னர், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து இவர் நடித்த ‘எதிர்நீச்சல்’ படம் இவரை முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக ஆக்கியது. 

இதைத் தொடர்ந்து விஜய்யுடன் ‘கத்தி’, விஷாலுடன் ‘ஆம்பள’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தற்போது தனுஷ் நடித்து வரும் ‘விஐபி-2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப்-நித்யாமேனன் நடித்து வரும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘எதிர்நீச்சல்’, ‘காக்கிசட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சதீஷ், மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

ஏற்கெனவே, துரை.செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களிலும் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுபோல், இந்த படத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
எதுக்கு இந்த வேலை, பப்ளிக்காக அசிங்கப்பட்ட சதிஷ் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions