சிவகார்த்திகேயனுடன் நடிக்க முயற்சிக்கும் சதீஷ்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் நடிக்க முயற்சிக்கும் சதீஷ்!

சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தவர் சதீஷ். இவர் சிவகார்த்திகேயனின் நண்பரும்கூட.

அதனால் அவரது சிபாரிசின் பேரிலேயே இந்த இரண்டு படங்களிலும் நடித்தார் சதீஷ். அந்த வகையில் எப்படி சந்தானத்துக்கு சிம்பு காட்பாதராக இருக்கிறாரோ அதேபோல் சதீசுக்கு சிவகார்த்திகேயன் காட்பாதராக இருக்கிறார். 

மேலும், ஏற்கனவே வசூல் ராஜா எம்பிபிஎஸ், மெரினா, மதராசப்பட்டினம், தமிழ்ப்படம் என பல படங்களில் நடித்திருந்தபோதும், சிவகார்த்திகேயனுடன் நடித்த படங்களே தனக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுத்தன என்பதால், மீண்டும் அவர் படங்களில் காமெடியனாக நடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் சதீஷ். 

ஆனால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் முக்கிய காமெடி கூட்டணியாகி விட்ட சூரியே இப்போது அவருடன் ரஜினி முருகன் உள்ளிட்ட சில புதிய படங்களிலும் கமிட்டாகியிருப்பதால் சதீஷால் சிவகார்த்திகேயனை நெருங்க முடியவில்லையாம்.

இருப்பினும், சூரியின் கால்சீட் கிடைக்காத சிவகார்த்திகேயன் படத்தில் நான் நுழைந்து விடவேண்டும் என்று நேரம் காலத்தை தற்போது எதிர்நோக்கியிருக்கிறாராம் சதீஷ்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
எதுக்கு இந்த வேலை, பப்ளிக்காக அசிங்கப்பட்ட சதிஷ் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions