கலையும் தெரியும் வியாபாரமும் தெரியும்: ஜே.சதீஷ்குமார்

Bookmark and Share

கலையும் தெரியும் வியாபாரமும் தெரியும்: ஜே.சதீஷ்குமார்

சினிமாவில் வியாபார சினிமா எடுப்பவர்கள் ஒரு ரகம். கலாபூர்வமான சினிமா எடுப்பவர்கள் இன்னொரு ரகம். இரண்டுக்கும் இடைப்பட்ட மத்திம சினிமா அதாவது மிடில் சினிமா எடுப்பவர்கள் மற்றொரு ரகம்.

இந்த மிடில் சினிமாவில் கலாபூர்வ அம்சங்களும் வியாபார நிறமும் இருக்கும். இப்படிப்பட்ட சினிமாக்களால்தான் ரசிகனின் ரசனைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்று பாலு மகேந்திரா போன்றோர் நம்பினர்.

கலா ரசனையுள்ள தயாரிப்பாளர்கள் அமைவது மிகவும் சிரமம். அப்படிப்பட்டவர்களைத் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட்டார்கள். ஆனால் இப்போது பலருக்கும் நம்பிக்கை தரும் வகையில் கலை ரசிகராக உள்ள ஒரு தயாரிப்பாளராக ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் சதிஷ்குமார் இருக்கிறார்.

அவர் தயாரிக்கும் படங்களில், வெளியிடும் படங்களில் கலை பூர்வமான அம்சங்கள் இருந்தால் வெளிவர துணிந்து உதவுகிறார். அப்படி அவர் தயாரித்த, வெளியிட்ட பரதேசி, தங்க மீன்கள் இரண்டுமே தேசிய விருது உள்பட பல விருதுகளை அள்ளின.

பிறகு குற்றம் கடிதம் தேசிய விருதுகள் பெற்று சர்வதேச பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இப்போது ராமின் இயக்கத்தில் தரமணி தயாரிக்கிறார். இதுவரை வந்த படங்களில் 15 படங்களில் இவரது பங்களிப்பு உள்ளது.

" நான் ஒரு வியாபாரிதான் ஆனாலும் என் தனிப்பட்ட ரசனையை வளர்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்குக் கலையும் தெரியும் வியாபாரமும் தெரியும் அதனால் பார்க்கும் படங்களில் நல்ல முயற்சி கலைத்தன்மை இருந்தால் என்னால் இனம் காணமுடியும்.

அதேநேரம் வியாபார சிந்தனையுடனும் தான் பார்ப்பேன், இது கையை கடிக்காது என்கிற நம்பிக்கை வந்தால் மட்டுமே வெளியிட வியாபாரம் பேசுவேன். என்கிறார். தெளிவாகத்தான் இருக்கிறார்!


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
எதுக்கு இந்த வேலை, பப்ளிக்காக அசிங்கப்பட்ட சதிஷ் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions