கீர்த்தி சுரேஷை உற்சாகப்படுத்திய சதிஷ்!

Bookmark and Share

கீர்த்தி சுரேஷை உற்சாகப்படுத்திய சதிஷ்!

ரெமோ படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் பைரவா படத்திலும் சதிஷ் காமெடியனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் மாலை அணிந்தபடி பைரவா படத்தின் பூஜையின் நின்றபோது எடுத்த புகைப்படங்களை வைத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவியது. ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் தற்போது இந்த விசயத்தை மீண்டும் கிளப்பிவிட்டுள்ளார் சதிஷ். அதாவது, ரெமோ படத்தின் நன்றி விழாவில்;- என்னையும், கீர்த்தி சுரேசையும் பற்றி திருமண கிசுகிசு வெளியானது பற்றி எனது அம்மா என்னிடம் கேட்டார். அப்போது அவங்க மேனகாவோட பொண்ணும்மா. இதெல்லாம் சும்மா என்றேன். அதைக்கேட்டு சந்தோசப்பட்ட அவர்களின் முகம் சோகமாக மாறியது.

மேலும், பைரவா படப்பிடிப்பை முடித்து விட்டுதான் நானும், கீர்த்தியும் இந்த விழாவுக்கு கிளம்பி வந்தோம். ஆனால் வந்து பார்த்தபோது ஒரே ஆச்சர்யம். நான் அணிந்து வந்திருந்த கறுப்பு கலரிலேயே கீர்த்தியும் டிரஸ் அணிந்து வந்திருந்தார்.

அந்த அளவுக்கு எங்களுக்கிடையே ஏதோ ஒரு வகையில் ஒரு ஒற்றுமை இருந்து வருகிறது என்று சொல்லி, மேடையில் அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷை சற்றே நெளிய வைத்துள்ளார் சதிஷ்.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions