250 கிலோ வில்லனிடம் அடி வாங்கிய காமெடியன் சதீஷ்!

Bookmark and Share

250 கிலோ வில்லனிடம் அடி வாங்கிய காமெடியன் சதீஷ்!

சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் படம் காமெடியன் சதீசுக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதுவரை சில காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த அவரை பின்னர் முக்கிய காமெடியனாக நடிக்க வைத்தனர்.

அந்த வகையில், நய்யாண்டி, மான்கராத்தே, கத்தி, சிகரம்தொடு ஆகிய படங்களில் முக்கிய காமெடியனாக நடித்த அவர், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.

அதையடுத்து, துக்கடான வேடங்களாக இல்லாமல் வெயிட்டான வேடங்களாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார் சதீஷ். அந்த வரிசையில், தற்போது வை ராஜா வை, காவல் ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த காமெடியனாக கலக்கியிருக்கிறாராம் சதீஷ்.

அதில், வா படத்தில் எனக்கு வெயிட்டான வேடம் வேண்டும் என்று இவர் கேட்டதைப்பார்த்த டைரக்டர், காமெடியில் மட்டுமே நடிக்க வைத்ததோடு நில்லாமல், ஒரு சண்டை காட்சியிலும் சதீஷை நடிக்க வைத்தாராம்.

அப்போது 250 கிலோ வெயிட் கொண்ட ஒரு மெகா வில்லன் இவரை ஓங்கி ஒரு அடி விட, பறந்து சில கிலோ மீட்டருக்கு அப்பால் அவர் போய் விழுவது போன்று படமாக்கப்பட்டுள்ளதாம்.

அதோடு வில்லன் விட்ட அடியும் சதீஷின் உடம்பை நிஜமாலுமே பதம் பார்த்து விட்டதாம். விளைவு, வெயிட்டான வேடம் கேட்டதற்கு எனக்கு வெயிட்டாக கொடுத்து விட்டார் டைரக்டர். அதனால் இனிமேல் யாரிடமும் இந்த வெயிட் என்கிற வார்த்தையையே யூஸ் பண்ண மாட்டேன் என்கிறார் சதீஷ். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions