ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தலைவணங்குகிறேன்: சத்யராஜ்

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தலைவணங்குகிறேன்: சத்யராஜ்

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இப்படி ஒரு எழுச்சியை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த எழுச்சி என்பது பிரெஞ்சு புரட்சி என்று சொல்வது போல், இது ஜல்லிக்கட்டுக்கான புரட்சி என்று சொன்னால் சரியாக இருக்கும். உலகத்திலேயே இப்படி ஒரு புரட்சி நடந்தது இல்லை.

இவ்வளவு கட்டுக்கோப்பாக பல லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு வந்து போராடி உள்ளனர். இந்த இளைஞர் சமுதாயத்தையும், மாணவர் சமுதாயத்தையும் தலைவணங்கி நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எங்களுக்கு மாணவர்கள் பாடமாக உள்ளனர். இனி அவர்களைத்தான் நாங்கள் பின்பற்றி செல்ல வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஓரிரு அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும். அது தவிர்க்கமுடியாத ஒன்று.

அதே நேரம் மாணவர்கள் தரப்பில் இருந்தும், இளைஞர்கள் தரப்பில் இருந்தும் எந்த வன்முறையும் ஏற்படவில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில், வெளியில் இருந்து எந்த விதமான சக்தி அவர்களை குழப்பிவிட்டது என்பதை எப்படி கூறமுடியும். இதுதொடர்பாக வழக்கு இருப்பதால் இதுகுறித்து மேற்கொண்டு கருத்துகள் கூற முடியாது.

இவ்வாறு நடிகர் சத்யராஜ் கூறினார். 


Post your comment





Related News
சத்யராஜின் பேச்சால் பெரிய சர்ச்சையில் சிக்கிய பாகுபலி படம்
விஜய் 61 படத்தில் நடிக்க இதுதான் காரணம் – சத்யராஜ் ஓபன் டாக்!
தொடர் ஆபாச படங்கள், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தகப்பன் நான்- சத்யராஜின் உருக்கமான பதிவு
அப்போ நம்ம எல்லாருமே செத்து போலாமா? சத்யராஜ் உச்சக்கட்ட கோபம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்.. சத்யராஜ் வலியுறுத்தல்
தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நடிகர் சத்யராஜ்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கார்த்தி, சத்யராஜ் பங்கேற்பு
ஜெ.வுக்கு அஞ்சலி: பலரும் கண்டுகொள்ளாத சசிகலாவுக்கு கும்பிடு போட்ட நடிகர் சத்யராஜ்
சத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்
‘கிட்னாப் – திரில்லர்’ படத்தை தயாரித்து நடிக்கும் சத்யராஜ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions