சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார்: சத்யராஜ் பேச்சு

Bookmark and Share

சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார்: சத்யராஜ் பேச்சு

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

இந்த விழா மிகவும் மகிழ்ச்சிகரமானது. எல்லோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். கமலும், ரஜினியும் ஒன்றாக இருக்கிறார்கள். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா. சரத்குமாரும், நாசரும் அருகருகே இருக்கிறார்கள். அதுதான் நடிகர் திலகத்தின் சிறப்பு.

கமலுடன் அமைச்சர் ஜெயக்குமார் கைகுலுக்குகிறார். எல்லோரது முகத்திலும் புன்னகை தவழ்கிறது. நடிகர் திலகத்தின் குடும்பத்தினர் அழைத்ததும் திறப்பு விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் வந்து இருக்கிறார். நடிகர் திலகத்தின் பெருமையை அவரது குடும்பத்தினர் கட்டிக்காத்து வருகிறார்கள்.

அவரது வசனத்தை பேசிதான் பலர் நடிப்பதற்கே வந்தனர். பராசக்தி வசனத்தை பேசிதான் நான் எஸ்.பி.முத்துராமனிடம் வாய்ப்பு கேட்டேன். நடிப்பு துறைக்கு வருபவர்களுக்கு பாலபாடமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விஜயகுமார் பேசும் போது, கலை என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அந்த வகையில் நடிகர் திலகம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் புகழப்படுவர் என்றார்.

நடிகர் சரத்குமார் கூறும் போது, இது மகிழ்ச்சியான விழா. இந்த இடத்தை கொடுத்து மணிமண்ட பம் கட்டிய மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

அமைச்சர்கள் படைசூழ மண்டபத்தை திறந்து வைத்த துணை முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த மண்டபம் வெறும் மண்டபமாக இல்லாமல் கலை உலகின் சிறப்புகளையும், நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து நிகழ்வாகவும் அமைய வேண்டும் என்றார்.


Post your comment





Related News
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions