மகேஷ்பாபு தந்தை ஆகிறார் சத்யராஜ்

Bookmark and Share

மகேஷ்பாபு தந்தை ஆகிறார் சத்யராஜ்

ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விஷால், கார்த்தி என டாப் ஹீரோக்களின் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. நல்ல வசூலையும் ஈட்டுகிறது. அதேபோல் சிரஞ்சீவி, ராம் சரண், மகேஷ் பாபு போன்றவர்களின் படங்கள் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது.

ஆனாலும் டோலிவுட்டில் தமிழ் படங்கள் வசூலை அள்ளுவதுபோல் கோலிவுட்டில் தெலுங்கு படங்கள் வசூலை குவிப்பதில்லை. இதையடுத்து டோலிவுட் ஹீரோக்கள் புதுதிட்டம் தீட்டி உள்ளனர்.

டோலிவுட் ஹீரோக்களின் படங்களில் தமிழ் நடிகர்களையும் பயன்படுத்துவதே அந்த திட்டம். அதன் மூலம் தமிழில் அந்த படத்தை வெளியிடும்போது, தமிழ் ரசிகர்கள் அப்படத்துடன் ஒன்றிப்போவார்கள் என கணித்துள்ளனர்.

முதல்கட்டமாக அதற்கான வேலையை தொடங்கி இருக்கிறார் மகேஷ் பாபு. காந்த் ஆட்லா இயக்கும் ‘பிரம்மோத்சவம்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் மகேஷ் பாபு. சமீபத்தில் இதன் தொடக்க விழா ஐதராபாத்தில் நடந்தது.

இதில் மகேஷ்பாபு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழியிலும் இப்படம் உருவாகிறது. ஏற்கனவே ‘மிர்ச்சி’ உள்ளிட்ட 2 தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார் சத்யராஜ்.


Post your comment





Related News
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions