விஜய் 61 படத்தில் நடிக்க இதுதான் காரணம் – சத்யராஜ் ஓபன் டாக்!

Bookmark and Share

விஜய் 61 படத்தில் நடிக்க இதுதான் காரணம் – சத்யராஜ் ஓபன் டாக்!

தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்கள் போக சத்யராஜ், வடிவேலு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிப்பது குறித்து பேசிய சத்யராஜ், ” இப்போதெல்லாம் ஹீரோயினுக்கு அப்பாவாக போர் அடிக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். விஜய் படத்தில் நடிப்பது அந்த காரணத்திற்காகதான்” என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions