ஆசை வார்த்தைகூறி மகளை பறித்து விட்டார்: தாயார் புகார்

Bookmark and Share

ஆசை வார்த்தைகூறி மகளை பறித்து விட்டார்: தாயார் புகார்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தில் நாயகியாக அறிமுக மானவர் சாட்னா டைட்டஸ். இவரை பட வினியோகஸ்தர் கார்த்தி ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம் என்று கார்த்தி கூறி இருக்கிறார். இதை சாட்னாவின் தாயார் மாயா மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது-

என் கணவர் டைட்டஸ் கேரளாவில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். என்மகள் சாட்னா பிளஸ்-2 படிக்கிறார். சினிமாவிலும் நடித்து வருகிறார். படவினியோகஸ்தர் கார்த்தி என் மகளிடம் “நீ நடிக்க வேண்டாம். உன்னை பெரிய தயாரிப்பாளராக மாற்றுகிறேன். வினியோகஸ்தர் ஆக்குகிறேன். நாம் லண்டனில் செட்டில் ஆகலாம்” என்று ஆசை வார்த்தை கூறி மூளை சலவை செய்து சாட்னாவை எங்களிடம் இருந்து பிரித்து விட்டார்.

இனி நடிக்க கூடாது. திருமணத்துக்குப்பிறகு நடித்தால் சரியாக இருக்காது என்று கூறி சில படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வைத்து விட்டார்.

போனில் கூட மகளிடம் பேச முடியாமல் செய்து விட்டார். கார்த்தி பதிவு திருமணம் செய்ததாக சொல்வது பொய். என் மகளை அவரிடம் இருந்து மீட்க திரை உலகினர் உதவி செய்ய வேண்டும். நடிகர் சங்கத்திடமும் இது பற்றி புகார் செய்து தீர்வு காண முயற்சி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
உயர்கல்வி படிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கூறும் `எய்தவன்'
ஒரு முக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் கலையரசனின் எய்தவன் - விபரம் உள்ளே
சொன்னபடியே பெற்றோர் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்த பிச்சைக்காரன் நடிகை
விஜய் ஆன்டனி ஹீரோயின் சட்னாவின் திருமணம்! பத்திரிக்கை இதோ
இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்தோம்: சாட்னா டைட்டஸ்
நடிகை மீராஜாஸ்மின் முன் பதிவு திருமணம் செய்து கொண்டார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions