சவாலே சமாளி நாளை வெளிவரும்: தயாரிப்பாளர் அருண்பாண்டியன் அதிரடி

Bookmark and Share

சவாலே சமாளி நாளை வெளிவரும்: தயாரிப்பாளர் அருண்பாண்டியன் அதிரடி

அருண்பாண்டியனின் மகள் கவிதா பாண்டியன் தயாரிப்பில் அசோக் செல்வன்-பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சவாலே சமாளி’. இப்படம் நாளை (செப்டம்பர் 4) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்று தயாரிப்பாளர் சங்கம் செப் 4 முதல் எந்த படமும் வெளியாகாது என்று திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டதால் நாளை முதல் எந்த படமும் ரிலீசாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ‘சவாலே சமாளி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண்பாண்டியன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்தார். 

அதில், ”நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டத்துக்கு நானும் சென்றிருந்தேன். அப்போது, நான் அவர்களிடம் நீங்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், தற்போது தயாரிப்பாளர் சங்கம் எந்த படமும் நாளை முதல் வெளியாகக்கூடாது என்று அறிவித்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 

நாங்கள் ‘சவாலே சமாளி’ படத்திற்கு 90 நாட்களுக்கு முன்னதாகவே சென்சார் வாங்கிவிட்டு, கடந்த ஒரு மாத காலமாக படத்தை வெளியிடுவதற்கான விளம்பரங்களில் ஈடுபட்டு வருகிறோம். தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பு 10 நாட்களுக்கு முன்னதாக வெளிவந்திருந்தால், இதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வோம். 

ஆனால், படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக வெளிவந்த இந்த அறிவிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஏனென்றால், இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்காக ஒரு குழுவை நியமித்து இதற்காக பணிபுரிந்து வருகிறோம்.

இந்தியாவில் வெளியிடாமல் இருப்பதற்கு முயற்சி செய்யலாமே தவிர, வெளிநாடுகளில் வெளியாவதை தடுக்க முடியாது. 

வெளிநாடுகளில் ரீலீசாகியப் பிறகு இந்த படத்தை தாமதப்படுத்தி இங்கே ரிலீஸ் செய்தால், அதில் எந்த பயனுமில்லை. இதனால் எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். 
எனவே, தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாகவே கருத வேண்டியிருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் எண்ணற்ற முடிவுகள் பாராட்டுக்குரியதாக உள்ளது. ஆனால், தற்போது எடுத்துள்ள முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். எனவே, திட்டமிட்டபடி நாளை ‘சவாலே சமாளி’ படம் வெளிவந்தே தீரும் என்று அவர் தெரிவித்தார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions