சாவித்ரியின் பெயரை கெடுத்த இசை பட நாயகி!

Bookmark and Share

சாவித்ரியின் பெயரை கெடுத்த இசை பட நாயகி!

எஸ்.ஜே.சூர்யா இயக்கி இசையமைத்து நடித்து வெளியான படம் இசை. இந்த படத்தில் சாவித்ரி என்ற வடக்கத்திய நடிகை நாயகியாக நடித்திருந்தார். இந்தியில், இம்ரான் ஹாஸ்மி நடித்த மர்டர்-2 படத்தில் அறிமுகமானவர் இவர்.

அந்த படத்தில் நடித்ததை விட தமிழில் படுகவர்ச்சியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டியிழுத்துள்ளார். இதையடுத்து, தமிழில் புதிய படங்களில் நடிப்பதற்காக தீவிரமாக கதை கேட்கும் படலத்தையும் முடுக்கி விட்டுள்ளார்.

அதோடு, இசை படத்தைப்போன்று கதை என்ன கேட்கிறதோ அதற்கேற்ப நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் அறிவித்துள்ள சாவித்ரி, இசை படத்தில் தான் நடிகையர் திலகம் சாவித்ரி ரேஞ்சுக்கு நடித்திருப்பதாக சொல்லி தன்னை எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் பாராட்டியதாகவும் கூறி வருகிறார்.

ஆனால், அதைக்கேட்டு, சாவித்ரி நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர். திறமையை மட்டுமே வெளிப்படுத்திய சிறந்த நடிகை. அப்படிப்பட்ட அவரது பெயரை இவருக்கு வைத்ததே தவறு. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவரது நடிப்போடு இவரை ஒப்பிட்டது அதைவிட பெரிய தவறு.

அந்த வகையில் சாவித்ரியின் பெயரை இந்த கவர்ச்சி நடிகைக்கு வைத்து அவரது பெயரை கெடுத்து விட்டனர் என்று கோடம்பாக்கத்தில் இசை சாவித்ரிக்கு எதிராக கமெண்டு கொடுத்து வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions