மாணவர்களுக்கு சோறு, தண்ணீ கொடுத்தது தப்பா.. திட்டமிட்டு கொளுத்திய போலீசார்.. கொதித்த சீமான்

Bookmark and Share

மாணவர்களுக்கு சோறு, தண்ணீ கொடுத்தது தப்பா.. திட்டமிட்டு கொளுத்திய போலீசார்.. கொதித்த சீமான்

சென்னை கலவரத்தின் போது நடுகுப்பத்தில் போலீசாரால் எரிக்கப்பட்ட மீன் சந்தையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை பார்வையிட்டார்.

அப்போது, தமிழக அரசும், காவல்துறையும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக குற்றம்சாட்டினார்.

சென்னை நடுகுப்பத்தில் எரிந்த மீன் சந்தை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழர்களின் எழுச்சியான போராட்டத்தை திட்டமிட்டு வன்முறையாக தமிழக அரசும், காவல்துறையும் மாற்றியுள்ளது. மாணவர்கள் மீது தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? சட்டம் குறித்து பேச நீதிபதிகள் ஹரிபரந்தாமன் மற்றும் சங்கர சுப்பு போன்றவர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து மாணவர்களிடம் அரசு பேசியிருக்கலாம். அப்படி பேசி இருந்தால் அரசுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்காது.

போராட்டக்காரர்களுக்கு சோறும், தண்ணீரும் கொடுத்தது தப்பா. அதற்காக அவர்களது வாழ்வாதாரத்தை நாசப்படுத்துவதா? ஆற்று மணல் கொள்ளையடித்தவர்களை, மரம் வெட்டி கடத்தியவர்களை, ஊழல் செய்தவர்களை என்ன செய்தீர்கள்? பாஸ்பரஸ் பொடியை தூவி மீன் சந்தையை எரித்துள்ளது போலீஸ்.

இதனை கண்ணால் பார்த்த சாட்சியங்கள் உள்ளன. பச்சை பிள்ளை என்று கூட பாராமல் குழந்தைகளையும், சிறுவர்களையும் போலீசார் லத்தியால் தாக்கியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு இனி உதவக் கூடாது என்பதற்காகத்தான் போலீசார் இப்படி செய்துள்ளனர்.

போலீசாரால் மண்டை உடைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எல்லாம் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியுமா? வாழ்வாதாரத்தை சீர் செய்ய வேண்டிய அரசே அதனை நசுக்குகிறது.

உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எரிக்கப்பட்ட மீன் சந்தைக்கு மேற்கூரை அமைத்து, சந்தை மீண்டும் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். காலம் தாழ்த்தாமல் இதனை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் - சீமான்
முதல்வர் ஓபிஎஸ்-க்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு- சசிக்கு எதிர்ப்பு: சீமான்
தைப் புரட்சியை அடியொற்றிய கம்பளா புரட்சி.. கன்னடர்களோடு நாம் தமிழர் கை கோர்க்கும்: சீமான்
ராகவா லாரன்ஸ் யாரு.. அவருக்கும் போராட்டத்திற்கு என்ன சம்பந்தம்…. கொதிக்கும் சீமான்
போராட்டக்களத்தில் பூத்த புரட்சிப் பூக்களுக்கு ஒரு கடிதம்! – செந்தமிழன் சீமான்
ஜெயலலிதா... காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை! - சீமான் இரங்கல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் - செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்
அஜித் படத்தை இயக்கும் சீமான்?
வேட்புமனு தாக்கலின் போது தனது சொத்து விவரங்களை வெளியிட்ட சீமான்!
சிம்புவை மன்னித்துவிடலாம்: சீமான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions