வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !

Bookmark and Share

வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் கடவுளை பற்றி கூறிய சர்ச்சை கருத்தால் மிகப்பெரிய கண்டனங்களை சந்தித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இது பற்றி பத்திரிகையாளர்கள் நாம் தமிழ் கட்சி தலைவர் சீமானிடம் கேட்டபோது, "வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது, அவர்களுக்கு வேறு பிரச்சனை இல்லை, இது ஒரு பிரச்சனை என்று எடுத்து செய்கிறார்கள்.

இப்போது வைரமுத்துக்கு எதிராக போராட்ட களத்தில் இருப்பவர்கள் ஏன் மீத்தேனுக்கு எதிராக போராடவில்லை, நெடுவாசலுக்கு போராடவில்லை விவசாயத்துக்கு போராடவில்லை, 30 மீனவர்கள் கொன்றவர்களுக்கு எதிராக போராடவில்லை.

அவர்களது உணர்வு புண்பட்டதற்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்துவிட்டார். இதுக்கு மேல் ஏன் அவரை சீண்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions