மூச்சு முட்ட வைத்த ஒரு சினிமா விழா!

Bookmark and Share

மூச்சு முட்ட வைத்த ஒரு சினிமா விழா!

நடிகர் செந்திலிடம் மேனேஜராக இருந்த மதுரை ஆர். செல்வம் என்பவர் வேலம்மாள் சினிகிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் சீனி . இப்படத்தை மனோஜ்குமார், சுராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜதுரை இயக்கியுள்ளார்.  

இப்படத்தில் பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் சஞ்சீவ் நாயகனாக நடிக்க ராதாரவி, சரவணன், செந்தில், சின்னி ஜெயந்த், கஞ்சாகருப்பு, பவர்ஸ்டார், டி.பி.கஜேந்திரன், மனோஜ்குமார், வையாபுரி, சுவாமிநாதன், பாவா லட்சுமணன், ரவிமரியா, அருள்தாஸ், மகேந்திரன், மீரா கிருஷ்ணன், நெல்லை ராயல்அம்பி, பரத்ரவி ஆகிய 18 பேருடன் சீனி என்கிற யானையும் நடித்து இருக்கிறது.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதுவரை தமிழ்ச் சினிமாவின் வரலாறு காணாத நிகழ்ச்சி (!) அது.
விழா மேடையில் 32 பேர் திரண்டு அமர்ந்திருந்தார்கள்.மேடையின் பின்னால் வேறு பலர் நின்றிருந்தார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன்,டி.சிவா, கதிரேசன்,  ராதாகிருஷ்ணன்,,சௌந்தர்,சுப்பையா,பாலாஜி,  இயக்குநர்கள் மனோஜ்குமார், ஆர்.கே.செல்வமணி , விக்ரமன், சண்முக சுந்தரம்,சக்தி சிரம்பரம், டி.பி.கஜேந்திரன், ரவிமரியா, கலைப்புலி ஜி.சேகரன், ராஜதுரை,நடன இயக்குநர் ராதிகா, நடிகர்கள் விவேக்,சின்னி ஜெயந்த், செந்தில், வையாபுரி, ஹரிகுமார், அருள்தாஸ், அழகு, ஜாக்குவார் தங்கம், சாமிநாதன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, லக்ஷ்மன் ஸ்ருதி ராமன்,பாடலாசிரியர்கள் சினேகன், விவேகா, சொற்கோ,  ஒளிப்பதிவாளர் நாகராஜ், தயாரிப்புரி நிவாகி ஜோ, பாடகர் எஸ்.என். சுரேந்தர், எடிட்டர் சாய் சுரேஷ், 

தொழிலதிபர்கள்  துபாய் நௌஷத், ரத்னா ஸ்டோர் அதிபர் எஸ்.ஆர். சீனிவாசன்,நெல்லை மானா அண்ணாச்சி, கே.சி.ரவி, எஸ்.எம்.ஜே.ஜெயமுருகன், மோகன், மணிபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்தப் பட்டியலைப் படித்தே மூச்சு முட்டுகிறதா?அனைவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது. இவர்கள் தவிர 11 சினிமா பிஆர்ஓக்களுக்கு வேறு பொன்னாடை போர்த்தப்பட்டது.

இப்படி இவர்களுக்கு ஆளாளுக்கு பொன்னாடை போட்டு அந்த 32 பேரும் பேசி முடிப்பதற்குள் பார்த்துப் பார்த்து கண்கள் சோர்வடைந்துவிட்டன. பேச்சைக் கேட்டுக் கேட்டு காதுகள் ரத்தம் சிந்தாத குறையாக கெஞ்சின.அப்பாடா  பார்வையாளர்களை மூச்சுமுட்ட வைத்த சினிமா விழா என்றால் இதுதான். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions