இயக்குனர் சீனுராமசாமியின் தங்கை திருமண வரவேற்பு : பிரபலங்கள் வாழ்த்து

Bookmark and Share

இயக்குனர் சீனுராமசாமியின் தங்கை திருமண வரவேற்பு : பிரபலங்கள் வாழ்த்து

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி. இவருடைய இளைய தங்கை அனிதாவுக்கும் அமெரிக்காவில் பணிபுரியும் பாலாஜி என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமண வரவேற்பு நேற்று சென்னையில் அரும்பாக்கம் லீ கிளப்பில் நடைபெற்றது. 

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், பசுமை தாயகம் நிறுவனர் சௌமியா அன்புமனி ராமதாஸ், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இயக்குனர்கள் பாலா, அமீர், ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, செந்தில், ராஜேஷ், மனோபாலா, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், லிவிங்ஸ்டன், கவிஞர் வைரமுத்து, உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமகனின் தந்தை நந்தகுமார், தாயார் விஜயலட்சுமி, மணமகள் அண்ணன் இயக்குனர் சீனு ராமசாமி, அண்ணி தர்ஷணா சீனு ராமசாமி ஆகியோர் விழாவுக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றனர்.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
மறைந்த துக்ளக் சோவுக்கு பத்மபூஷண் விருது - மத்திய அரசு அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions