மக்கள் இயக்குநர் ஆனார் சீனுராமசாமி... மதுரைக் கல்லூரி பட்டம் வழங்கியது

Bookmark and Share

மக்கள் இயக்குநர் ஆனார் சீனுராமசாமி... மதுரைக் கல்லூரி  பட்டம் வழங்கியது

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சீனு.  தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனரான சீனு ராமசாமிக்கு மதுரைக் கல்லூரி (The Madura College)  மக்கள் இயக்குனர் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கி உள்ளது.

இந்த கல்லூரி - 125 வருடம் பாரம்பரியம் மிக்க  கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. 26 - 03 - 2015 அன்று மாலை 5.00 மணி அளவில் மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. முரளி மற்றும் பேராசிரியர் முனைவர் ந.ரத்தினக்குமார் ஒருங்கிணைப்பாளர் அவர்களால் சீனுராமசாமிக்கு மக்கள் இயக்குநர் என்ற பட்டயச்சான்றிதழும் விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டது.

சாதாரணர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்தவர் என்று சீனுராமசாமிக்கு பாராட்டப்பட்டிருக்கிறார்.

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்த் திரை உலகிற்கு மதிப்பு கூட்டிய  சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குனர் என்ற விருதை வழங்குவதில் மதுரைக்கல்லூரி பண்பாட்டுக்கழகம் பெருமை கொள்கிறது என்று விருது பட்டயம் வாசித்து மேடையில் இயக்குனருக்கு வழங்கப்பட்டது.

“வாழும் காலத்தில் பட்டப்பெயர்களை அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விதத்தில் மக்கள் தரும் பட்டப்பெயர்களே நிரந்தரமானவை.

ஆயினும் மதுரையில் மதிப்புமிக்க மதுரைக் கல்லூரியின் கல்விக்குழுமம் வழங்கும் இவ்விருதினை ஏற்றுக் கொள்கிறேன். மேலும் இவ்விருதைப் பெறும் இச்சந்தர்பத்தில் பொறுப்புணர்சியும் கூடுகிறது” என்று  ஏற்புரையில் இயக்குனர் சீனு ராமசாமி  கூறினார்.

 


Post your comment

Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
மறைந்த துக்ளக் சோவுக்கு பத்மபூஷண் விருது - மத்திய அரசு அறிவிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions