சீனு ராமசாமிதான் என்னுடைய தர்மதுரை: விஜய் சேதுபதி உருக்கம்

Bookmark and Share

சீனு ராமசாமிதான் என்னுடைய தர்மதுரை: விஜய் சேதுபதி உருக்கம்

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தர்மதுரை’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று காலை சென்னையில் நடந்தது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டனர். 

அப்போது, இப்படத்தின் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்து, எந்த வாய்ப்புமே கிடைக்காமல் கடைசியில், வேறு வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில், சீனு ராமசாமி என்னிடம் வந்து அவர் எழுதியிருந்த முழு கதையையும் கொடுத்து என்னை படிக்கச் சொல்லி, அதில் நீதான் நடிக்கவேண்டும் என்று கூறினார். அந்த படம் தான் ‘தென்மேற்கு பருவக்காற்று’. 

அன்று சீனு ராமசாமி அவருடைய கதையில் என்னை நடிக்க வைக்கவில்லையென்றால், இன்று இவ்வளவு பெரிய இடத்திற்கு நான் வந்திருக்க முடியாது. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்கு பிறகுகூட எனக்கு வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. அப்போது சோர்ந்து இருந்த நிலையிலும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தவர் சீனு ராமசாமி. என்னை பொறுத்தவரை அவர்தான் என்னுடைய தர்மதுரை என்று உருக்கமாக பேசினார்.

மேலும், அவர் பேசும்போது, ‘தர்மதுரை’ படம் ஆரம்பிப்பதற்கு முன்பு, இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷுக்கும் எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. தற்போது, இப்படம் முடிவடைந்திருக்கும் இத்தருணத்தில் எனக்கும் ஆர்.கே.சுரேஷுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது. இப்போது, இருவரும் நெருங்கிய நண்பர்களாகியிருக்கிறோம். இதற்கு முழு காரணம் சீனு ராமசாமிதான் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions