ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் அணி வெற்றி!

Bookmark and Share

ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் அணி வெற்றி!

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் தங்கள் பணிகளை தொடங்கி உள்ளனர். அடுத்து ‘சிகா ‘ எனப்படும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி’, பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலைஅணி’, கே.வி.கன்னியப்பன் தலைமையில் 'ஆண்டவர்அணி’ என்று 3 அணிகள் போட்டியிட்டன.

ஒளிப்பதிவாளர் சங்கத்தில் 1200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆந்திராவில் 120 பேர், கர்நாடகாவில் 60 பேர், கேரளாவில் 40 பேர் உள்ளனர்.

காலை 8 மணி முதல் தொடங்கிய இந்த தேர்தல் மாலை 4 மணி வரை நடந்தது. இதில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான ‘நடுநிலை அணி’ வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions