ரஜினிக்கு அம்மாவாக நடிக்க சொன்னாலும் நடிப்பேன் : நடிகை சீதா

Bookmark and Share

ரஜினிக்கு அம்மாவாக நடிக்க சொன்னாலும் நடிப்பேன் : நடிகை சீதா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சீதா. தற்போது மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ஆர்.கே. நாயகனாக நடித்து திரைக்கு வந்த என்வழி தனிவழி படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இப்போது ஷாஜி கைலாஷ் இயக்கி வரும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு இல்லையே என்று கேட்டபோது ஒருவர் இயக்கத்தில் நடித்தால் அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அது மட்டுமல்ல தமிழில் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வரும்போது அதை மிஸ் பண்ண மாட்டேன். பலர் அம்மா கேரக்டர் என்று கேட்கிறார்கள். நான் இதற்கு மறுப்பு சொல்வதில்லை.

ஒரு கேரக்டருக்காக தன்னை மாற்றி கொள்ளும் வசதி தொழில்நுட்பரீதியில் இப்போது வளர்ந்திருக்கிறது. அதனால் ஆர்.கே. என்ன, ரஜினிக்கு அம்மாவாக நடிக்க சொன்னாலும் நடிப்பேன். இப்போது மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படம் நடித்து வருகிறார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions