பிரபல காமெடி நடிகர் செல்லத்துரை காலமானார்

Bookmark and Share

பிரபல காமெடி நடிகர் செல்லத்துரை காலமானார்

பிரபல காமெடி நடிகர் செல்லத்துரை உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவருக்கு வயது 74. ‘தூறல் நின்னு போச்சு’ படம் மூலம் நடிகராக அறிமுகமான செல்லத்துரை, இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார்.

வடிவேலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுடன் இவர் நடித்த ‘பிரபா ஒயின்ஸ் ஷாப் ஓனரா’ என்ற காமெடி காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த செல்லத்துரை, சில வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். மறைந்த செல்லத்துரைக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions