நெஞ்சம் மறப்பதில்லை படப்பிடிப்பை முடித்த செல்வராகவன்!

Bookmark and Share

நெஞ்சம் மறப்பதில்லை படப்பிடிப்பை முடித்த செல்வராகவன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாக இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். மேலும் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்குனர் கெளதம் மேனன் தனது ஒன்றாக என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா ஆகியோர் இப்படம் மூலம் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions