பிரபல நகைச்சுவை நடிகர் விபத்தில் பலி!

Bookmark and Share

பிரபல நகைச்சுவை நடிகர் விபத்தில் பலி!

அந்நியன், அலெக்ஸ் பாண்டியன் போன்ற 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர்பெற்றவர் செல்வக்குமார் (வயது 58). வடிவேலு கூட்டணியில் இவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலம். இவர் சென்னை தியாகராயநகர் சீனிவாச தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு இவர் இன்னொரு நகைச்சுவை நடிகரான கோவை செந்திலுடன் பர்கிட் ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இவர் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டரின் பிரேக் வயர் அறுந்து, இவர் தடுமாறி கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் இவரது தலையில் பலத்த அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் இவர் பொதுமக்களால் உடனடியாக ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் மரணம் அடைந்தார்.

இவருக்கு கீதா என்ற மனைவியும், ரோகிணி, கார்த்திகா என்ற மகள்களும் உள்ளனர். இவர் கடைசியாக சூர்யாவுடன் S3 படத்தில் நடித்து வந்தார். இவருடன் சென்ற கோவை செந்தில் தற்போது பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவரது உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

 


Post your comment





Related News
ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்
விஜய் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!
தூர்தர்ஷன் சிறப்பு நிகழ்ச்சியில் பி.டி.செல்வக்குமார் - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார்!
கருத்துக்கணிப்பில் பி.டி.செல்வக்குமாருக்கு வெற்றி - குவியும் இளைஞர்களின் ஆதரவு!
தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாருக்கு பாஜக மாநில நிர்வாகி பொறுப்பு!
மீண்டும் படம் இயக்கும் புலி தயாரிப்பாளர்!
தயாரிப்பாளர்களை காப்பாற்றும்படி விஜய் பட தயாரிப்பாளர் உண்ணாவிரதம்!
புலி தயாரிப்பாளரின் மூன்று படங்கள்!
விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!
மெய்யழகி படத்திற்கு கண்டிப்பா விருது கிடைக்கும் - இயக்குனர் பி.டி.செல்வகுமார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions