செல்வராகவனோடு இணையும் அனிருத்!

Bookmark and Share

செல்வராகவனோடு இணையும் அனிருத்!

சிம்பு நடித்த கான் படத்தைப் பாதியிலேயே நிறுத்தினார் செல்வராகவன். அவர் அவருடைய தம்பி தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்காகவே அந்தப்படத்தை நிறுத்தினார் என்று சொல்லப்பட்டது. இப்போது அது உறுதியாகியிருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறதாம். இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதுவரை தன்னுடைய படங்களுக்கு யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஹாரிஸ்ஜெயராஜ் ஆகியோரையே இசையமைக்க வைத்திருந்தார் செல்வராகவன். ஹாரிஸ் இசையமைத்த இரண்டாம்உலகம் படத்துக்கு அனிருத் பின்னணிஇசையமைத்தார் என்று சொல்லப்பட்டது. 

இப்போது முதன்முறையாக செல்வராகவன் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கமகன் படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் கடைசியில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். 

அந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு நடுவிலேயே இந்தப்படத்தில் நடிப்பதற்கும் தேதி கொடுத்திருக்கிறாராம் தனுஷ். செல்வராகவன், தன்னுடைய கடந்த படங்களைப் போல இந்தப்படத்துக்கு அதிகநாட்கள் எடுத்துக்கொள்ளாமல் வேகமாகப் படத்தை முடித்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
என்னது செல்வராகவன் மனைவியா இது? - அசந்து போன கோலிவுட்.!
RK நகரில் தான் ஆதரவு யாருக்கு? மறைமுகமாக தெரிவித்து செல்வராகவன்- புகைப்படம் உள்ளே
நடிகர் திலகத்தின் பிரபல பாடல் வரிகளை படத்தலைப்பாக்கிய சந்தானம்
சந்தானம் - செல்வராகவன் இணையும் படப்பிடிப்பு தொடங்கியது
விஜய்க்கு எழுதிய கதைதான் இப்போ சூர்யாவுக்கா?
அன்னை இல்லத்தில் விஜய்-செல்வராகவன் சந்திப்பு?
எஸ்.ஜே.சூர்யாவுக்கு பட்டம் கொடுத்த செல்வராகவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions