வீட்டில் குழந்தைகளுடன் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்

Bookmark and Share

வீட்டில் குழந்தைகளுடன் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்

‘காதல் கொண்டேன்’, 7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களை இயக்கியவர் செல்வராகவன். அப்படங்களைத் தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படங்களை இயக்கினார். வித்தியாசமான கதையும், திரைக்கதையும் அமைத்து இயக்கும் செல்வராகவன் கடைசியாக ஆர்யா- அனுஷ்காவை ஜோடியாக வைத்து ‘இரண்டாம் உலகம்’ படத்தை இயக்கினார்.

இப்படம் அதிகம் வரவேற்பு பெறாததால் இப்படத்துக்குப் பிறகு செல்வராகவன் படங்கள் எடுக்காமல் ஒதுங்கி குழந்தைகளுடன் நேரத்தை கழிக்க ஆரம்பித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது புது பட வேலைகளை துவங்கி இருக்கும் செல்வராகவன், இன்று தன் பிறந்த நாளை எளிமையாக வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

இதைப்பற்றி அவர் கூறும்போது, என் பிறந்த நாளான இன்று என் குழந்தைகளுடன் இருந்தது அற்புதமான நேரமாக உள்ளது. அதற்குமேல் என்னால் சொல்வதற்கு வார்த்தை இல்லை. இந்த நேரத்தில் என் மனைவி கீதாஞ்சலிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
செல்வராகவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
கடவுளே விட்ருங்க, செல்வராகவன் புலம்பல்
புதுப்பேட்டை-2 மட்டுமில்லை அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வருகிறதா? ரசிகர்கள் உற்சாகம்
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
செல்வராகவன், சந்தானம் படத்தின் புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions