இயக்க நினைத்தால் எந்தப் படத்தையும் இயக்கலாம்: செல்வராகவன்

Bookmark and Share

இயக்க நினைத்தால் எந்தப் படத்தையும் இயக்கலாம்: செல்வராகவன்

‘காதல் கொண்டேன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இப்படத்தைத் தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களை இயக்கினார். வித்தியாசமான கதையம்சமும் திரைக்கதையும் கொண்ட இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது.

செல்வராகவன் கடைசியாக ஆர்யா-அனுஷ்கா ஜோடியை வைத்து ‘இரண்டாம் உலகம்’ படத்தை இயக்கினார். இப்படம் அதிகம் வரவேற்பு பெறாததால் இப்படத்துக்குப் பிறகு செல்வராகவன் படங்கள் எடுக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புதுப் படத்துக்கான கதையை உருவாக்கியுள்ளார். இதில் சிம்பு நாயகனாக நடிக்கவுள்ளார்.

செல்வராகவன் இயக்கிய ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்டவை. ஒரு படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்ற நேர்த்தி தெரிந்தவர். கடினமான விஷயங்களை கூட மிகவும் எளிதாக கையாண்டு வருகிறார்.

இந்நிலையில், இளம் இயக்குனர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். “ஒரு படத்தை உருவாக்குவது எளிது என்று நினைத்தால் அது எளிதாக இருக்கும். அதே சமயம் கடினம் என்று நினைத்தால் மிகவும் கடினமாக இருக்கும்’ என்று செல்வராகவன் கூறியுள்ளார். 

 


Post your comment





Related News
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
கடவுளே விட்ருங்க, செல்வராகவன் புலம்பல்
புதுப்பேட்டை-2 மட்டுமில்லை அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வருகிறதா? ரசிகர்கள் உற்சாகம்
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
செல்வராகவன், சந்தானம் படத்தின் புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions