செல்வராகவன் முதுகில் குத்தியது யார்...யார்...?

Bookmark and Share

செல்வராகவன் முதுகில் குத்தியது யார்...யார்...?

ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு கடந்த ஒன்றரை வருடங்களாக வேறு எந்தப் படத்தையும் இயக்காமலிருந்தார் செல்வராகவன். அதன் பின் எந்த ஒரு பத்திரிகை பேட்டியும் கொடுக்கவில்லை.

எந்த ஒரு விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் பொறுப்பான அப்பாவாக குடும்பத்தினருடன் அதிக ஈடுபாட்டில் இருந்தார். சில நாட்களுக்கு முன்னர்தான் அவரும், சிம்புவும் மீண்டும் இணைய உள்ள படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டி ஒன்றில் 'இரண்டாம் உலகம்' படத்தின் தோல்வி குறித்து பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், “இரண்டாம் உலகம்" படத்தைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் பச்சையாகப் பேச வேண்டும்.

அதை அச்சில் கூட ஏற்ற முடியாது, அந்த அளவிற்கு சுமார் 325 பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்,” என்று சொல்லியிருக்கிறார். ஒரு வேலையை செய்ய சம்மதித்தால் அதில் நேர்மை இருக்க வேண்டும், எனக்கு என் மீது  நம்பிக்கை இருக்கிறது, சேர்ந்து செய்யலாம் என்று சொன்னவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்,”என்றும் கூறியிருக்கிறார்.

அப்படியென்றால் செல்வராகவன் முதுகில் குத்திய அந்த 325 பேரில் யார் யார் இருப்பார்கள் என்பது தற்போது ஒரு புதிய சர்ச்சையாக எழும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களில் படத்தின் நாயகனான ஆர்யா, நாயகியான அனுஷ்காவும் இருப்பார்களா என்பதுதான் அடுத்த கேள்வியாக எழும். இன்னும் சில நாட்களுக்கு கோலிவுட்டில் இது தொடர்பான பல செய்திகளை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
கடவுளே விட்ருங்க, செல்வராகவன் புலம்பல்
புதுப்பேட்டை-2 மட்டுமில்லை அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வருகிறதா? ரசிகர்கள் உற்சாகம்
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
செல்வராகவன், சந்தானம் படத்தின் புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions