செல்வராகவன் சொன்னது உண்மையாகிறதா...?

Bookmark and Share

செல்வராகவன் சொன்னது உண்மையாகிறதா...?

இரண்டாம் உலகம் படத்தை இயக்கிய விதத்தில் இயக்குனர் செல்வராகவனுக்கும் படத்தைத் தயாரித்த நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை உருவானதாக படம் வெளிவந்த போது பேசப்பட்டது.

அதற்குப் பிறகு படத்திற்காக ஏற்பட்ட நஷ்டத் தொகையை செல்வராகவனிடம் இருந்து பெற்றுத் தரவேண்டும் என தயாரிப்பு நிறுவனம் அப்போதைய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடமும் கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டது.

அதன் பின் சிம்புவை வைத்து படம் இயக்க முடிவெடுத்த செல்வராவனின் முயற்சிகள் அனைத்தும் தடைபட்டுப் போனது. ஒரு வழியாக அனைத்தும் முடிந்து தற்போது சிம்பு நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்கப் போகிறார். சில தினங்களுக்கு முன் செல்வராகவன் அளித்த பேட்டியில் இரண்டாம் உலகம் படத்தின் உருவாக்கத்தில் பலர் தன் முதுகில் குத்தி விட்டதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதே தினத்தில் இரண்டாம் உலகம் படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் ஆர்யா, அனுஷ்கா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா, அனுஷ்காதான் இணைந்து நடித்திருந்தனர். அவர்கள் மீண்டும் அதே நிறுவனத்தின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதன் மூலம் செல்வராகவன் முதுகில் குத்தியவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள வைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்தப் பிரச்சனை மேலும் பரபரப்பாகப் பேசப்பட வாய்ப்புள்ளது என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். 


Post your comment





Related News
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
கடவுளே விட்ருங்க, செல்வராகவன் புலம்பல்
புதுப்பேட்டை-2 மட்டுமில்லை அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வருகிறதா? ரசிகர்கள் உற்சாகம்
ஒளிந்திருந்து சந்தானத்தை நோட்டம் விட்ட இயக்குனர் செல்வராகவன்!
செல்வராகவன், சந்தானம் படத்தின் புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions