சிம்பு படத்துக்கு மனைவியை தயாரிப்பாளராக்கினார் செல்வராகவன்

Bookmark and Share

சிம்பு படத்துக்கு மனைவியை தயாரிப்பாளராக்கினார் செல்வராகவன்

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை  உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்து இளம் இயக்குநர்களில் டிரெண்ட் செட்டராக விளங்கியவர் தான் செல்வராகவன்.

பின்னர் தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்ததால் காணாமல் போனவர், நீண்டஇடைவெளிக்குப் பின், சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். கையில் படம் இருந்தபோது செல்வராகவனுக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடித்த சிம்பு, தற்போது படமும்..பணமும் இல்லாமல் இருக்கிறார்.

எனவே நல்லபிள்யையாக செல்வராகவன் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு போட்டோசெஷன் எடுக்கப்பட்ட பிறகும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தன் மனைவி கீதாஞ்சலியையே தயாரிப்பாளர் ஆக்கிவிட்டார் செல்வராகவன். குளோ ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தொடங்கி,  தன் பள்ளித்தோழரான சித்தார்த் ராவ் உடன் இணைந்து கீதாஞ்சலி செல்வராகவன் இப்படத்தைத் தயாரிக்கின்றார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, டாப்ஸி இருவரும் நடிக்கின்றனர்.  இந்தப் படத்தை தெலுங்கிலும் வெளியிடும் திட்டத்தில், தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெகபதி பாபுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இவர்களுடன், முன்னாள் கதாநாயகனான சுரேஷ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை படங்களின் வெற்றிக் கூட்டணியாக விளங்கி பின்னர் செல்வராகவனைவிட்டுப் பிரிந்துபோன யுவன் சங்கர்ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இப்படத்தில் இணைந்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions