செல்வராகவன் - சிம்பு - யுவன் கூட்டணி பட வேலைகள் ஆரம்பம்...!

Bookmark and Share

செல்வராகவன் - சிம்பு - யுவன் கூட்டணி பட வேலைகள் ஆரம்பம்...!

தமிழ்த் திரையுலகில் ஆச்சரியப்படும் விதத்தில் செல்வராகவன், சிம்பு கூட்டணி இணையும் படத்தைப் பற்றிய அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. எப்படி இப்படியெல்லாம் நடக்கிறது என்றெல்லாம் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களே ஆச்சரியத்துடன் பேச ஆரம்பித்தார்கள்.

அவர்களது ஆச்சரியத்தைப் போக்கும் வகையில் இந்தக் கூட்டணி தற்போது இணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டது. அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாகப் பிரிந்திருந்த செல்வராகவன், யுவன்ஷங்கர் ராஜாவும் மீண்டும் இந்தப் படம் மூலம் இணைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இப்படத்திற்கான பாடல் பதிவு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. செல்வராகவன், சிம்பு, யுவன்ஷங்கர் ராஜா மூவரும் இணைந்து பாடல் பதிவு வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.

இது குறித்து செல்வராகவன் கூறுகையில்,

“மீண்டும் பழைய நினைவுகளில் சென்றோம். ஆனால் எதிர்காலத்திற்கான முதல் படியை எடுத்து வைத்திருக்கிறோம். எங்களது வித்தியாசமான கூட்டணியை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

சிம்பு கூறுகையில்,

“எல்லா எதிர்மறையான, மோசமான, குத்தலான, பொறாமை பிடித்த, கபட குணம் கொண்டவர்களுக்காக சிம்பு, யுவன் கூட்டணியில் ஒரு புதிய பாடல் வரவிருக்கிறது. இப்போதெல்லாம் வெறுப்பும், பொறமையும் தான் அதிகம் இருக்கிறது.

அப்படிப்பட்டவர்களை மாற்றுவதற்காக ஒரு பாடலை வெளியிட உள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.விரைவில் இந்தப் புதிய கூட்டணியின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions