மீண்டும் நடிக்கிறார் செந்தில்

Bookmark and Share

மீண்டும் நடிக்கிறார் செந்தில்

1979ம் ஆண்டு ஒரு கோவில் இரு தீபங்கள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான செந்தில். கே.பாக்யராஜ் இயக்கிய இன்று போய் நாளை வா படத்தின் மூலம் புகழ்பெற்றார்.

அதன் பிறகு கவுண்டமணியுடன் ஜோடி சேர்ந்தும், தனியாகவும் 200 படங்களுக்கு மேல் நடித்தார். கடந்த சில வருடங்களாக நடிப்பதை குறைத்துக் கொண்ட செந்தில், அரசியலில் ஆர்வம் காட்டினார்.

ஆதிவாசியும் அதிசய கைப்பேசியும் என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தார். அந்தப் படம் பின்னர் கைவிடப்பட்டது. கடைசியாக இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் நடித்தார்.

6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கள்ளப்படம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மிஷ்கின் உதவியாளர் வடிவேலு இயக்கும் இந்தப் படத்தில் அவர் நடிக்கும் கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

சினிமா தொடர்பான இந்தப் படத்தில் நடிகர் செந்திலாகவோ அல்லது புரொடக்ஷன் மானேஜராகவோ நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தில் 4 காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் ரீபீட் சீன் முறையில் படம் முழுக்க அவர் வருவதாக கதை அமைத்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது!
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி
சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions