செந்திலுக்கு நல்லவன் கைகொடுப்பானா.?!

Bookmark and Share

செந்திலுக்கு நல்லவன் கைகொடுப்பானா.?!

'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் புகழ்பெற்றவர் செந்தில். தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணனாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு செங்காத்து பூமியிலே படத்தில் ஹீரோவானார், கண் பேசும் வார்த்தைகள், பப்பாளி, வெண்ணிலா வீடு படங்களில் நடித்தார்.

இதில் வெண்ணிலா வீடு படம் மட்டும் கொஞ்சம் ரீச் ஆனது. மற்ற படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் நம்பிக் கொண்டிருப்பது ரொம்ப நல்லவண்டா நீ படத்தை.

கமர்ஷியல் ஆக்ஷன் படங்களை எடுத்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் முதன் முறையாக இயக்கிய காமெடி படம். இதற்கு பிறகு ஆரம்பித்த சும்மா நச்சுன்னு இருக்கு படம் ரிலீசாகிவிட்டது. சண்டமாருதம் நாளை (ஜன 20) ரிலீசாக இருக்கிறது. நீண்டநாள் கிடப்பில் கிடந்த ரொம்ப நல்லவண்டா நீ ரிலீசாக இருக்கிறது.

கிராமத்திலிருந்து நகரத்தில் வந்து வேலை செய்யும் ஒரு இளைஞன் கேரக்டரில் நடிக்கிறார். வந்த இடத்தில் வந்து சேரும் பிரச்சினைகளும், ஊரில் சொந்த பிரச்சினைகளுமாக அல்லாடும் கதை. வேறு படங்கள் எதுவும் கையில் இல்லாத நிலையில் செந்தில் நம்பிக் கொண்டிருப்பது நல்லவனை மட்டும்தான்.


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது!
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி
சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions