செய்நன்றி மறந்தார் சங்கர்? - மனம் திறக்கும் செந்தில்

Bookmark and Share

செய்நன்றி மறந்தார் சங்கர்? - மனம் திறக்கும் செந்தில்

தென்னிந்திய தமிழ்த் திரையுலகம் தாண்டி பொலிவூட், ஹொலிவூட் என அனைத்து மொழித் திரையுலகிலும் அறியப்பட்டவரும், தன் பெயரோடு "பிரம்மாண்ட இயக்குனர்" என்ற அடைமொழியோடு அனைவராலும் அறியப்பட்ட வெற்றி இயக்குனராக வலம் வருபவர்தான் சங்கர்.

இன்றைய தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் இயக்குனர் பல பெருமைமிகு விருதுகளுக்கும் சொந்தக்காரர்.  இவ்வளவு பெருமைகளுக்கு உரிய இவர், தனது திரையுலக பிரவேசத்திற்கு காரணமான நன்றிக்குரியவரை மறந்ததும், அதைப்பற்றி இதுவரைக்கும் ஒரு வார்த்தைகூட வெளியில் சொல்லாதது பற்றியும் தான் கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்படும் கதையாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் நகைச்சுவை காட்சிகளில் கொடிகட்டிப்பறந்த கூட்டணியான கவுண்டமணி-செந்தில் ஆகியோரில், நடிகர் செந்தில்தான் தற்போதைய "பிரம்மாண்ட இயக்குனர்" என்று சொல்லப்படும் சங்கர், உதவி இயக்குனராவதற்கு பாதை அமைத்துக் கொடுத்தவர்.

ஆரம்ப காலத்தில் இயக்குனர் சங்கர் சினிமா உதவி இயக்குனராக வருவதற்கு பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அந்த நேரம் பிரபல இயக்குனராக இருந்த நம்ம "இளையதளபதி" யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் சிபாரிசு செய்து சங்கரை உதவி இயக்குனராக இணைத்துவிட்ட நன்றிக்கும் பெருமைக்கும் உரியவர் தான் செந்தில்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் படத்தில் செந்திலின் நகைச்சுவைக் காட்சிகளுக்கே முதன் முதலில் வசனம் எழுதியதுடன், இதன் மூலமே இந்த உதவி இயக்குனர் வாய்ப்பும் கிடைத்ததாம் சங்கருக்கு. நிலை இப்படியிருக்க, எத்தனையோ பட விழாக்கள், விருது விழாக்கள், மேடைகள் கிடைத்தும் சங்கர் இதுவரை ஒருமுறைகூட இதுபற்றி மறந்தும் வாய் திறந்ததில்லை.

அண்மையில் செந்திலின் உதவியாளராக இருந்த ஒருவர் தயாரிப்பில் உருவான "சீனி" பட விழாவில் கலந்து கொண்டு படம் வெற்றிபெற நடிகர் செந்தில் வாழ்த்திப்பேசும்போதே இந்த விசயத்தையும் சொல்லியிருக்கிறார்.

இந்தநிலையில், சங்கர் பற்றிக் கூறிய செந்திலிடம், 'நீங்கள் செய்த உதவி பற்றி இயக்குனர் சங்கர் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறாரா.?'  என்று கேட்டபோது, அது பற்றி தனக்குத் தெரியவில்லை என்று கூறிய செந்தில், நியாயமாக இதுபற்றி நீங்கள் சங்கரிடம் தான் கேட்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

திரையில் மட்டுமே பாசத்துக்கும், நட்புக்கும், நன்றிக்கும், மனிதாபிமானத்திற்கும் மதிப்புக் கொடுப்பதாய் காட்சி வைக்கும் சங்கர் போன்றவர்கள், நிஜத்தில் செய்நன்றி மறந்த குறுகிய மனம் படைத்தவர்களாய் இருப்பது தான் கொடுமை என்று கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்படும் கதையாக மாறியுள்ளது.


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது!
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி
சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions