பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?

Bookmark and Share

பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பட்ட சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக மற்ற சேனல் ரசிகர்களை கவர்ந்திழுத்தது விஜய் டிவி.

இந்த சீரியலில் நடித்து புகழ் பெற்ற மெர்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவருமே ரசிகர்களின் ஆசைகளால் நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விட்டனர்.

இவர்கள் இருவருக்கும் சேர்ந்து தற்போது மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்து வருகின்றனர், ஆனால் இந்த சீரியல் சரவணன் மீனாட்சி போல ரசிகர்களின் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

இதனால் இன்னும் ஓரிரு வாரங்களில் சீரியலை முடிவுக்கு கொண்டு வர அந்த தொலைக்காட்சி திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கசிந்த இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்தால் தான் எதுவும் உறுதியாக தெரிய வரும்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions