ஹாலிவுட் நடிகரான சென்ட்ராயன்!

Bookmark and Share

ஹாலிவுட் நடிகரான சென்ட்ராயன்!

மூடர்கூடம் படத்தில் வெளிச்சத்துக்கு வந்தவர் சென்ட்ராயன். அதையடுத்து பல படங்களில் நடித்திருக்கும் அவர், வில்லத்தனம் மட்டுமின்றி காமெடியான வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் ஒரு ஹாலிவுட் நடிகராக நடிக்கிறாராம். இதுபற்றி அவர் கூறுகையில், என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரி வேடங்கள்தான் என்றில்லாமல் எந்த மாதிரியான வேடமாக இருந்தாலும் அதுவாகவே என்னை மாற்றி நடித்து வருகிறேன்.

அந்த வகையில், இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் கிராமத்தில் இருந்து நடிக்க சான்ஸ் தேடி வரும் மில்க் பாண்டி என்ற வேடத்தில் நடித்திருக்கிறேன். மேலும், பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஸ்பீல் பெர்க் இயக்கும் படத்தில் ஜாக்கிசான் நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பது போன்ற வேடத்தில் நடித்துள்ளேன்.

கோடம்பாக்கத்தில் எல்லோருமே தமிழ்ப்படத்தில் நடிக்க, நான் மட்டும் ஹாலிவுட் படத்தில் எப்படி நடிக்கிறேன் என்பதுதான் சஸ்பென்ஸ் என்று சொல்லும் சென்ட்ராயன், இந்த படம் திரைக்கு வரும்போது ஹாலிவுட் நடிகர் கெட்டப்பில் நடித்துள்ள காட்சிகள் என்னை ரசிகர்களிடையே பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்கும் என்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions