சர்வர் சுந்தரத்துக்காக துபாய் சென்ற சந்தானம்

Bookmark and Share

சர்வர் சுந்தரத்துக்காக துபாய் சென்ற சந்தானம்

‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் தற்போது ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை ஆனந்த் பால்கி என்பவர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, கோவா, தென்காசி ஆகிய இடங்களில் படமாக்கிய படக்குழு தற்போது கிளைமாக்ஸ் காட்சிக்காக துபாய் சென்றுள்ளார்கள்.

துபாயில் பன்னிரெண்டு நாட்கள் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் மட்டுமல்லாது ஒரு பாடல் காட்சியையும் மேலும் ஒரு முக்கியமான காட்சியையும் படமாக்கவிருக்கிறார்களாம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செல்வக்குமார் தயாரித்து வருகிறார். படப்பிடிப்புக்கா துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய 'சர்வர் சுந்தரம்' படக்குழுவினரை, சந்தானத்தின் துபாய் ரசிகர்கள் விமர்சையாக வரவேற்றார்களாம். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தொழில்நுட்ப பணிகளை தொடங்கவுள்ளனர். 


Post your comment





Related News
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சந்தானத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!
சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு முடிந்தது – விரைவில் ரிலீஸ்!
ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் சந்தானம்!
சந்தானம் படத்தை வாங்க போட்டிபோடும் முன்னணி நிறுவனங்கள்!
பிரமிக்க வைக்கும் தில்லுக்கு துட்டு படத்தின் முதல்நாள் வசூல் விவரம்!
சர்வர் சுந்தரம் முதல் தோற்றம் சந்தானம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions