மாருதி காரை ஹீரோவாக்கிய மலையாள இயக்குனர்..!

Bookmark and Share

மாருதி காரை ஹீரோவாக்கிய மலையாள இயக்குனர்..!

இது மலையாள சினிமாவில் காதாசிரியர்களாக இருக்கும் இரட்டையர்கள் பிரிவதும், அவர்களில் ஒருவர் இயக்குனராவதுமான சீசன் போல.. அந்த லிஸ்ட்டில் பிரபல இரட்டை கதாசிரியர்களான சாச்சி-சேது இருவரில் ஏற்கனவே சாச்சி தனியாக பிரிந்து பிருத்விராஜை வைத்து 'அனார்கலி' என்கிற படத்தை இயக்கிவருகிறார்.

இப்போது சேதுவும் ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டார்.. இவர் இயக்கவுள்ள கிராமத்து கதையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி கார் ஒன்று தான் பிரதான ரோலில் நடிக்கிறது.. கூடவே சப்போர்ட்டுக்காக ஒரு ஹீரோவும் நடிக்கிறார்.

தமிழில் கூட இப்படித்தானே 'பண்ணையாரும் பத்மினியும்' என்கிற படத்தில் ஒரு பிரிமியர் பத்மினி காரை பயன்படுத்தினார்கள்.. மலையாள சினிமாவில் கார், ஆட்டோ, பைக், பஸ் இவற்றையெல்லாம் பிரதான கதாபாத்திரங்களாக வைத்து நகைச்சுவை படம் எடுப்பது பல வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

“இன்று கார் வைத்திருப்பவர்களில் யாரை கேட்டாலும் தங்களது முதல் காராக மாருதி வைத்திருந்ததாகத்தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு பலபேரின் வாழ்க்கையில் மாருதி காருக்கு முக்கிய இடம் உண்டு. இந்தப்படத்தின் கதை ஒரு மாருதி காருக்கும் ஹீரோவுக்குமான பந்தத்தை பற்றியது என்கிறார் சேது.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions