சேதுபதி படத்துக்கு நடந்த கொடுமை – குமுறும் தயாரிப்பாளர்!

Bookmark and Share

 சேதுபதி படத்துக்கு நடந்த கொடுமை – குமுறும் தயாரிப்பாளர்!

“திருப்பதி லட்டு” படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகும் தயாரிப்பளார் சுரேஷ்காமாட்சி பேசுகையில் நேர்முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை காரசாரமாக்கினார்.

நேர்முகம் ட்ரைலர் பார்க்கும்போது படம் பார்க்கும் ஆர்வம் வருகிறது. புதுமுகம் ரஃபி நன்றாக நடிக்கிறவர் என்று தெரிகிறது. இயக்குனர் முரளி கிருஷ்ணா அனுபவம் வாய்ந்தவர்.

அவர் தயாரிப்பாளரை காப்பாற்றிவிடுவார் என நம்பலாம். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். இங்கு நிறைய மீடியா சகோதரர்கள் இருப்பதால் முக்கியமான ஒரு செய்தியை சொல்லியாகவேண்டும்.

​“சேதுபதி” படம் ரீலிசான அன்னைக்கே படம் டோரண்ட்ல வெளியாகிருச்சு. பல கோடிகள் போட்டு நாங்கள் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தா அன்னைக்கே இப்படி ஆன்லைன்ல வரதைப் பத்தி தயாரிப்பாளர்கள் அடங்​கிய வாட்ஸ் அப்பில் செய்தியாகப் போட்டு வருத்தப்பட்டிருந்தேன்.

ஆனா யாரும் அதைப் பெரிசா எடுத்துக்கவே இல்லை. ​ஏன்னா யாரோ வீட்டிலதானே தீ எரியுது நமக்கென்ன என்றிருந்துவிடுகிறார்கள்.. ​

யார் பண்றாங்கன்னு கண்டுபிடிக்கிறது ஒண்ணும்​ ​அவ்ளோ பெரியவிசயமில்லை. ஆனா​ ​கண்டுபிடிக்கிறதை ​யாரும் ​பெரிசா​ ​எடுத்துக்கல. அதான்​ ​வருந்தவேண்டிய விசயமா இருக்கு. மானியம் கிடைக்காம 400 தயாரிப்பாளர்கள்​ ​கஷ்டப்படுறாங்க.

மானியம்​ ​கொடுத்து 8 வருஷமாச்சு.​ ​ரெண்டு ஆட்சி மாறியாச்சு.​ ​தயாரிப்பாளர் சங்கத்துல​ ​மூணு தடவை நிர்வாகிகள்​ ​மாறியாச்சு. ஆனா, இந்த​ ​மானியம் விஷயத்துல​ ​இதுவரை ஒண்ணும் பெரிசா​ ​நடக்கலை. இவங்க​ ​நேரடியாக தமிழக முதல்வர்கிட்ட கேட்​கல.​ ​

இந்திய சினிமா 100வதுஆண்டு விழா கொண்டாடுனப்போ, 10கோடி கொடுத்தாங்க தமிழகமுதல்வர். ஏன்னா அவங்க​ ​ஒரு நிரந்தர சினிமா​ ​கலைஞர். நிரந்தர சினிமா​ ​உறுப்பினர்.

சினிமா மேல​ ​அவங்களுக்கு அன்பு​ ​இருக்கு. அப்படி​ப் பட்டவங்க​ ​இதை நிறுத்தி​ ​வைக்கமாட்டாங்க. அவங்க​ ​பார்வைக்கு விசயத்தை​ ​தயாரிப்பாளர் சங்க​ ​நிர்வாகிகள் கொண்டுபோனாங்களா… அதுக்கு​ ​முயற்சி எடுத்தாங்களான்னு தெரியல.

‘அதே மாதிரி 3 வருசமா, தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கும் விழா நடக்கல.​ ​அதையும் யாரும் கேட்டமாதிரி தெரியல. தேர்தல் நேரத்துல நாடகம் போடக்கூடாதுன்னு​ ​சொன்னா​ ​நாடகக்கலைஞர்கள்​ ​பாதிக்கப்படுவாங்கன்னு​ ​நடிகர் சங்க நிர்வாகிகள்​ ​தேர்தல் கமிஷனரை நேரா​ ​பார்த்து பேசுறாங்க. மனு​ ​கொடுக்கிறாங்க.

ஆனா, தயாரிப்பாளர் சங்கநிர்வாகிகள், சங்க உறுப்பினர்களுக்காக அப்படி​ ​செயல்பட்ட மாதிரி தெரியல.​ ஒரு படத்துக்கு மானியம்கேட்டு அப்ளிகேசன்​ ​கொடுக்கிறப்போ அதற்குகட்டணமாக ஒவ்வொரு படத்துக்கும் அந்த படம்சார்பாக ரூ.1000/-தயாரிப்பாளர் சங்கம்​ ​மூலமாக அரசுக்கு கடந்த எட்டு வருசமா​ ​போயிட்டிருக்கு. அதனால​ ​மானியம் கேட்டு​ ​விண்ணப்பிக்கிறது​ ​அந்தத்​து​றை சம்பந்தமான​ அரசு அதிகாரிகளுக்​கு நல்​லாவே தெரியும்.

எல்லாப்​ படத்தையும்​ ​பார்த்தாச்சுன்னும்​ ​சொல்றாங்க. ஆனா, ஏன்​ ​எட்டு வருசமா நிறுத்தி​ ​வச்சிருக்காங்க​ ​அப்டிங்கிறதுக்கு எந்தவிபரமும் தெரியல.​ எனக்குத் தெரிந்து நாம் அரசை சரியான முறையில் அணுகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இனியாவது நடிகர் சங்கம் முதல்வரை அணுகுவதைப் போல் தயாரிப்பாளர் சங்கமும் அணுக வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள் ​என்று​ ​பேசினார் சுரேஷ்​ ​காமாட்சி.

 


Post your comment

Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions