சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சேதுபதி’. இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை மதுரை மாநகரில் ஒரே கட்டமாக நடத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது படக்குழுவினர் படத்தை பிப்ரவரி 19ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘காதலும் கடந்து போகும்’ படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions