பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்- புகார் கொடுத்த நாயகி

Bookmark and Share

பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்- புகார் கொடுத்த நாயகி


நடிகை பாவனாவின் பிரச்சனைக்கு பிறகு நிறைய நாயகிகள் தங்களுக்கு சினிமா துறையில் நடக்கும் தொல்லைகள் குறித்து பேசி வருகின்றனர்.

அண்மையில் பாபி ஜி கர் பர் என்ற ஹிந்தி தொடரில் நடித்து வரும் ஷில்பா ஷிண்டே அத்தொடரின் தயாரிப்பாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சய் என்னிடம் நடந்து கொண்ட விதம் சரியில்லை. என்னை அடிக்கடி செக்ஸி என்று அழைத்தார். மேலும் ஏதாவது காரணம் சொல்லி என் மீது கை வைத்தார்.

தன்னுடன் படுக்கைக்கு வராவிட்டால் தொலைக்காட்சி தொடரில் இருந்து நீக்கிவிடுவேன் என்று சஞ்சய் என்னை மிரட்டினார்.

கடந்த ஆண்டு மனஅழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டேன். அதை தாங்க முடியாமல் தான் தற்போது வெளியே கூறுகிறேன் என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions