அமெரிக்காவில் அதிபயங்கர சண்டைக்காட்சியுடன் உருவாகும் திரில்லர் படம்!

Bookmark and Share

அமெரிக்காவில் அதிபயங்கர சண்டைக்காட்சியுடன் உருவாகும் திரில்லர்  படம்!

நடிகர் ஷாம் தற்போது “2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் கா-வியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க பிரம்மிப்பின் தலைநகரமான “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்பட்டு வருகிறது.

இன்று இப்படத்துக்காக சண்டை பயிற்சியாளர் STUN சிவா தலைமையில் ஒரு அதி பயங்கர கார் சேஸிங் சண்டைக்காட்சி, லாஸ் வேகாஸில் மக்கள் அதிகம் கூடும் வீதிகளில் பரபரப்பாக படமாகியுள்ளது. STUN சிவா கடும் ரிஸ்க் எடுத்து ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த சண்டைக்காட்சி படம் வெளியானதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.

இதுவரை பல தரமான படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்துள்ள STUN சிவா, விரைவில் வெளிவரவிருக்கும் தொடரி படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில் நவி சதிஷ்குமார் வசனத்தில் ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
என்னது ஆர்யாவுக்கா இப்படியொரு பழக்கம்? பிரபல நடிகரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
”வாடு ஒஸ்தாடு” என்ற பெயரில் தெலுங்கில் உருவாகும் ஷாமின் “காவியன்”!
ஷாமின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!
மனிஷாவுடன் ரொமான்ஸ் அனுபவம்: ஷாம்
காலக்கூத்திலிருந்து வெளியேறினார் ஷாம்
ஷாமுக்கு கிடைத்த பாராட்டு!
எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்
சிம்ரன்-ஜோதிகாவை நினைத்துக்கொண்டே நடித்த ஷாம்!
ஒரு மெல்லிய கோடு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions