ஷாமுக்கு கிடைத்த பாராட்டு!

Bookmark and Share

ஷாமுக்கு கிடைத்த பாராட்டு!

2000-ம் வருடத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்-ஜோதிகா நடித்த குஷி படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர்தான் ஷாம். ஆனால் அதற்கடுத்த ஆண்டிலேயே மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய 12பி என்ற படத்தில் ஹீரோவாகி விட்டார் ஷாம்.

அதோடு, அப்போதைய முன்னணி ஹீரோயின்களான சிம்ரன்-ஜோதிகா இருவரும் அவருக்கு ஜோடிகளாக கிடைத்தனர். எந்த புதுமுக ஹீரோக்களுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு அப்போது ஷாமுக்கு கிடைத்தது. ஆனபோதும், அவரது எதிர்காலம் சினிமாவில் எதிர்பார்த்தபடி பிரகாசமாக அமையவில்லை.

இருப்பினும், லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற படங்கள் ஷாமுக்கு ஓரளவு பெயர் வாங்கிக்கொடுத்தன. அதன்பிறகு தமிழில் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், தெலுங்கு, கன்னடம் என்று பரவலாக நடிக்கத் தொடங்கி விட்ட ஷாம், ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், இயற்கை படத்திற்கு பிறகு மீண்டும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடித்துள்ள புறம்போக்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஷாம்.

அதிலும் தொடக்கம் முதல் கடைசி வரை ஒரேமாதிரியான இயல்பான  நடிப்பை கொடுத்திருக்கிறார். அந்த இயல்பான நடிப்பைப்பார்த்த கோலிவுட்டிலுள்ள சில ஹீரோக்களும், இயக்குனர்களும் ஷாமுக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்து வருகிறார்களாம்.

அதில் சில இயக்குனர்கள் அவரை அதிரடியான கேரக்டர்களில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்களாம். அதனால், நாம் விரும்புவதை விட மற்றவர்கள் நம்மை எந்த மாதிரியாக திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்பதை உணர்ந்து விட்ட ஷாம், இனிமேல் ஹீரோ வேடத்துக்காக காத்திருக்காமல் மாறுபட்ட நடிகராக வலம்வரத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
என்னது ஆர்யாவுக்கா இப்படியொரு பழக்கம்? பிரபல நடிகரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
”வாடு ஒஸ்தாடு” என்ற பெயரில் தெலுங்கில் உருவாகும் ஷாமின் “காவியன்”!
அமெரிக்காவில் அதிபயங்கர சண்டைக்காட்சியுடன் உருவாகும் திரில்லர் படம்!
ஷாமின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!
மனிஷாவுடன் ரொமான்ஸ் அனுபவம்: ஷாம்
காலக்கூத்திலிருந்து வெளியேறினார் ஷாம்
எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்
சிம்ரன்-ஜோதிகாவை நினைத்துக்கொண்டே நடித்த ஷாம்!
ஒரு மெல்லிய கோடு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions