மலையாள திரையுலகில் காலடி வைக்கிறார் ஷாம்..!

Bookmark and Share

மலையாள திரையுலகில் காலடி வைக்கிறார் ஷாம்..!

கிட்டத்தட்ட 15 வருடங்களாக தமிழ் திரையுலகில் தனது இருப்பை தக்கவைத்து கொண்டிருக்கும் நடிகர் ஷாம், அவ்வப்போது தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்தும் வருகிறார்.

சொல்லப்போனால் தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறார். ஆனால் இன்னும் மலையாள திரையுலகில் மட்டும் அவர் கால் வைக்கவில்லை. தற்போது மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்திருக்கிறது.

அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கும் 'லார்ட் லிவிங்ஸ்டோன் 7௦௦௦ கண்டி' என்கிற படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிப்பவர் குஞ்சாக்கோ போபன்.

கதாநாயகி ரீனு மேத்யூஸ் ஏற்கனவே அனில் இயக்கிய 'சப்தமஸ்ரீ தஸ்கரா' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான். அனிலின் முந்தைய இரண்டு படங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற நெடுமுடி வேணுவுக்கும், இதில் மிக முக்கிய கதாபாத்திரம் உண்டு.

டைட்டில் மூலமே ரசிகர்களுக்கு  ஆர்வத்தை ஏற்படுத்துவதில் இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் புது ரூட்டை கையாளுபவர். அதுமட்டுமல்ல முந்தைய இரண்டு படங்களில் இவர் காட்டிய ஸ்டைல் தான் இப்போது அவரின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Post your comment





Related News
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
என்னது ஆர்யாவுக்கா இப்படியொரு பழக்கம்? பிரபல நடிகரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
”வாடு ஒஸ்தாடு” என்ற பெயரில் தெலுங்கில் உருவாகும் ஷாமின் “காவியன்”!
அமெரிக்காவில் அதிபயங்கர சண்டைக்காட்சியுடன் உருவாகும் திரில்லர் படம்!
ஷாமின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!
மனிஷாவுடன் ரொமான்ஸ் அனுபவம்: ஷாம்
காலக்கூத்திலிருந்து வெளியேறினார் ஷாம்
ஷாமுக்கு கிடைத்த பாராட்டு!
எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்
சிம்ரன்-ஜோதிகாவை நினைத்துக்கொண்டே நடித்த ஷாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions