காலக்கூத்திலிருந்து வெளியேறினார் ஷாம்

Bookmark and Share

காலக்கூத்திலிருந்து வெளியேறினார் ஷாம்

புறம்போக்கு படத்திற்கு பிறகு ஷாமின் ரேட்டிங் சற்று கூடியிருக்கிறது. டெரர் போலீஸ் அதிகாரி, கண்டிப்பான அண்ணன், வில்லன் கேரக்டர்களுக்கு நிறைய வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

பெரிய ஹீரோக்கள் படம் என்றால் மற்ற கேரக்டர்களில் நடிப்பது, சிறிய படம் என்றால் ஹீரோவாகத்தான் நடிப்பது என்ற பாலிசியை எடுத்திருக்கிறார் ஷாம். நாகராஜன் என்பவர் இயக்கும் காலக்கூத்து என்ற படத்தில் நடிக்க ஷாம் சம்மதித்திருந்தார்.

இதில் ஷாம், மெட்ராஸ் கலையரசன் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருவருக்கும் சம வாய்ப்பு என்று கூறியிருந்தார்களாம். இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது.

இதில் முதல் நாள் கலந்து கொள்ளச் சென்ற ஷாமை கெட்அப் மாற்றச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். "ஏற்கெனவே சில படங்களில் நடித்து வருகிறேன். கெட்அப் மாற்றினால் அந்தப் படங்களில் நடிக்க பிரச்னை வரும். கெட்அப் சேன்ஞ் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே" என்று ஷாம் கூறியிருக்கிறார்.

"இது மதுரை கதை அதற்கேற்ப மாற்ற வேண்டும்" என்று இயக்குனர் கூறியிருக்கிறார். இதற்கு உடன்படாத ஷாம் படப்பிடிப்பிலிருந்து வெளியேறினார். "இயக்குனர் பேசியபடி படத்தை எடுக்கவில்லை. முன்பு சொன்னதிலிருந்து நிறைய மாற்றங்கள் செய்து எடுக்கிறார்.

அதனால் படத்திலிருந்து ஷாம் விலகிக் கொள்கிறார்" என்று ஷாம் தரப்பு தகவல்கள் கூறுகிறது.  "இது புறம்போக்கு படத்திற்கு முன்பே அவர் ஒப்புக் கொண்ட படம். புறம்போக்கு படத்திற்கு பிறகு அவரது மார்கெட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் ஏதேதோ காரணம் சொல்லி விலகிக் கொள்கிறார்" என்று படத் தரப்பு கூறுகிறது. தற்போது கலையரசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமெடுத்து வருகிறார்கள்.


Post your comment





Related News
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
என்னது ஆர்யாவுக்கா இப்படியொரு பழக்கம்? பிரபல நடிகரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
”வாடு ஒஸ்தாடு” என்ற பெயரில் தெலுங்கில் உருவாகும் ஷாமின் “காவியன்”!
அமெரிக்காவில் அதிபயங்கர சண்டைக்காட்சியுடன் உருவாகும் திரில்லர் படம்!
ஷாமின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!
மனிஷாவுடன் ரொமான்ஸ் அனுபவம்: ஷாம்
ஷாமுக்கு கிடைத்த பாராட்டு!
எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்
சிம்ரன்-ஜோதிகாவை நினைத்துக்கொண்டே நடித்த ஷாம்!
ஒரு மெல்லிய கோடு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions