ஷாமின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

Bookmark and Share

ஷாமின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

நடிகர் ஷாம் தற்போது “2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் கா-வியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க பிரம்மிப்பின் தலைநகரமான “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்படவுள்ளது.

ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், சத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின் என்பவரும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

இவர் ஏற்கனவே பல ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில் நவி சதிஷ்குமார் வசனத்தில் ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

மேலும் சண்டைப்பயிற்சி – STUN சிவா, நடனம் – விஷ்ணு தேவா, கலை – ஜான் பிரிட்டோ, நிர்வாக தயாரிப்பு – கணேஷ் குமார் ( Las Vegas) என மிக பிரம்மாண்டமான தொழில்நுட்ப கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.

 


Post your comment





Related News
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
என்னது ஆர்யாவுக்கா இப்படியொரு பழக்கம்? பிரபல நடிகரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
”வாடு ஒஸ்தாடு” என்ற பெயரில் தெலுங்கில் உருவாகும் ஷாமின் “காவியன்”!
அமெரிக்காவில் அதிபயங்கர சண்டைக்காட்சியுடன் உருவாகும் திரில்லர் படம்!
மனிஷாவுடன் ரொமான்ஸ் அனுபவம்: ஷாம்
காலக்கூத்திலிருந்து வெளியேறினார் ஷாம்
ஷாமுக்கு கிடைத்த பாராட்டு!
எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்
சிம்ரன்-ஜோதிகாவை நினைத்துக்கொண்டே நடித்த ஷாம்!
ஒரு மெல்லிய கோடு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions